குடிநீர் பிரச்சினை காணப்படும் பல்வேறு பிரதேசங்களில் நாடளாவிய ரீதியில் 20 சூரிய மின்சக்தி குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிக்க ஜப்பானிய சர்வதேச மேம்பாட்டு நிதியம் முன்வந்துள்ளது.
இதுதொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொழும்பிலுள்ள ஜப்பான் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் செயலாளர் சகாய் வரடானி தலைமையிலான குழுவினர், அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது நாட்டில் உள்ள பின்தங்கிய பகுதிகளின் குடிநீர் பொறுத்துவதென்றும், இவ்வருடத்திற்குள் குறித்த பணியினை நிறைவு செய்வதென்றும் கலந்துரையாடப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.