விபத்தி இருவர் படுகாயம்!

Report Print Mubarak in சமூகம்
91Shares

திருகோணமலை - தம்பலாகாமம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் வீதியால் சென்ற மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தம்பலாகாமம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்விபத்துச் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஏ.எஸ்.நஸாரே வயது (30), மற்றும் எம்.எஸ்.அப்துல் ஹலிம் வயது (32) ஆகியோரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவரில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியாவிலிருந்து முள்ளிப்பொத்தானைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போதே மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.