உச்சக்கட்ட பனிப்பொழிவு! பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

Report Print Murali Murali in சமூகம்
248Shares

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாரிஸ் உட்பட பிரான்ஸ் முழுவதும் இன்று காலை கடும் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், முக்கிய சில வீதிகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை நாளை காலை வரை விடுக்கபப்ட்டுள்ளது.

l’Aisne, les Ardennes, l’Aube, le Cher, l’Eure-et-Loir, l’Indre, l’Indre-et-Loire, le Loir-et-Cher, le Loiret, la Marne, la Nièvre, le Nord, l’Oise, Pas-de-Calais, Paris மற்றும் 3 புறநகர்கள், Seine-et-Marne, Yvelines, Somme, l’Yonne, l’Essonne,Val-d’Oise ஆகிய 24 மாவட்டங்களிலேயே கடும் பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரிசுக்குள் 2 இல் இருந்து 5cm வரையான பனிப்பொழிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக Météo France அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, அதிகளவான பனி பொழிவு காரணமாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.