தமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்த வகையில் கொண்டாடப்பட்ட தை பொங்கல்

Report Print Kumar in சமூகம்
154Shares

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவிலில் பொங்கல் விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

எருவில் - தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்ததாக இந்த பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் கலந்துகொண்டிருந்தார்.

இதன் போது கிராமிய வழக்கத்தின் அடிப்படையில் பொங்கல் நிகழ்வும் மேலும் மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதுடன் விவசாயிகளும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.