இலங்கை அதல பாதாளத்திற்குள் தள்ளிய இரு அமெரிக்க பிரஜைகள் சிக்கிய மர்மம்

Report Print Vethu Vethu in சமூகம்

25 வருடங்களின் பின்னர் அமெரிக்கர்கள் இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் 1100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியிலான ஹெரோயின் போதைப்பொருள் கொள்ளுப்பிட்டியில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 மற்றும் 43 வயதுடைய அமெரிக்கர்கள் இருவர் உள்ளடங்குகின்றனர்.

ஹெரோயினுடன் அமெரிக்கர் 25 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 45 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயினுடன் ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவர் 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய இருவரும் ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த இருவராகும்.

ஒரு கிலோவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் வழங்கிய தகவலுக்கமைய இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு வீடு ஒன்றிலேயே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது சம்பவம் இலங்கை வரலாற்றையே மாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்லரசு நாடுகளை சேர்ந்த இவ்வாறானவர்கள் இலங்கையை குறி வைத்து மோசடி வர்த்தகங்களை மேற்கொள்வது நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers