முன்னாள் பிரதம நீதியரசருக்கு அழைப்பாணை விடுத்த உயர் நீதிமன்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

சந்திரகுப்த தெனுவர, வடுகே சிறில் மற்றும் பிரசன்ன குணவர்தன ஆகிய பேராசிரியர்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.

குறித்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் விஜித் மலால்கொட , மருது பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பிரதிவாதியான முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா ஆஜராகியதுடன் தமது வாதி, வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த சட்டமா அதிபரின் உதவியை பெற்றுக்கொள்வதாக நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதியரசர்கள், அன்றைய தினம் பிரதிவாதியான சரத் என் சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers