யாழில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

யாழ். சாவகச்சேரி பொலிஸாரால் நாவற்குழி மகாவித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் பவளகுமார் தலைமையில், இன்று காலை நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மதுவிலிருந்து விடுதலை பெற்ற நாடு எனும் தொனிபொருலான போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தென்மராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தசாநாயக்க, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.கே.கோணார மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் ஆகியோர் மாணவர்களுக்கான கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers