தனது மகளின் மரணத்தில் மர்மம்! ஊடகங்களின் முன் கதறும் தாய்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இன்று அவர்களது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மரணமடைந்த மாணவியான வசந்தராஜா தேவயானியின் தாயாரான வசந்தராஜா மல்லிகாதேவியே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மரப்பாளம் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா தேவயாணி (18 வயது) என்ற மாணவி கடந்த 30.10.2018 அன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீட்க்கப்பட்டு 85 நாட்கள் கடந்துள்ள நிலையில் தங்களது மகளின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், மகள் கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டதை வைத்து அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று சொல்லமுடியாது எனவும், தனது மகளின் மரணம் கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதற்கான காரணங்கள் இருப்பதாக தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.