கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் இன்று காலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

எலும்புக்கூடுகளின் மாதிரிகளை கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவின், புளோரிடாவிற்கு கொண்டு செல்வதற்காகவே விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற சான்று பொருட்கள் காப்பாளரின் பொறுப்பில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பின் கீழ் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த எலும்புக்கூடுகளின் மாதிரிகளானது நாளைய தினம் அதிகாலை கட்டார் எயார் விமானத்தின் மூலம் இலங்கையிலிருந்து எடுத்து செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers