ஹெரோயின் விற்பனை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்

கொலன்னாவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன், இன்று கடூழிய ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான அசன்ன பெர்னாண்டோ என்ற நபருக்கே இந்த ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நபர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் 9.64 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதுடன் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.

Latest Offers