வவுனியா விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்ற இளைஞன் மீது தாக்குதல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா பழைய பேருந்து நிலையம் பிரதான கண்டி வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்ற இளைஞன் மீது தாக்கியதில் சற்று பதற்றநிலை ஏற்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இன்று மாலை பழைய பேருந்து நிலைய பிரதான கண்டி வீதியில் பயணித்த இளைஞன் ஒருவர் பேருந்து நிலையப்பகுதிக்குத் திரும்புவதற்கு முற்பட்டபோது, கண்டி வீதியிலிருந்து மணிக்கூட்டுக் கோபுரத்தினை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி மீது மோதியுள்ளன.

இதையடுத்து விபத்துக்குள்ளான நபரைத்தூக்கச் சென்ற இளைஞன் மீது விபத்துக்குள்ளான நபர் தாக்கியதில் பேருந்து நிலையப்பகுதியிலிருந்து சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிஸார் கள விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.

இரண்டையும் பொலிஸ் நிலையத்திற்கு இடுத்து சென்றுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய இருவரையும் இளைஞனை தாக்கியதாக தெரிவிக்கப்படும் நிலையப்பகுதியிலிருந்த இளைஞர்கள் சிலரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிளினை செலுத்திய நபர் ஒருவர் மதுபோதையிலிருந்துள்ளதாக விபத்தை நேரில் பார்வையிட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.