ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

Report Print Vamathevan in சமூகம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தில் யாழ். மாவட்டதிற்கு பொறுப்பாக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

யாழ். மாவட்ட தலைவராக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் மீண்டும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers