வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!

Report Print Murali Murali in சமூகம்

2009ஆம் ஆண்டுமுதல் படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் முழுமையான விபரங்களை தமக்கு வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான பொறுப்பான அதிகரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் முழுமையான விபரங்கள், அவற்றில் மீள்குடியேறிய மக்களின் முழுமையான விபரங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்கள், ஏனைய உதவித்திட்டங்கள் தொடர்பிலான முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் இதன்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் ஆகியவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...