மாற்றம் பெறவுள்ள யாழ். பலாலி விமானத்தளம்!

Report Print Ajith Ajith in சமூகம்

யாழ்ப்பாணம் பலாலி விமானத்தளம் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன்படி இந்தியாவின் விமானத்தளங்களுக்கான சேவைகள் அங்கிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக இரண்டு பில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இதுவரையில் பலாலி விமானத்தளம் இலங்கைப்படையினரின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் யோசனை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பலாலி விமான நிலையத்தள வட பிராந்திய விமான போக்குவரத்து சேவைகளை நடத்தும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மாற்றி அபிவிருத்தி செய்ய இந்தியாவில் உதவியை பெற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் பலாலியில் இருந்து இந்தியாவின் சில நகரங்களுக்கு விமான சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.