மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர்...

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, பாண்டியன் குளம் பகுதியில் மதுபோதையில் இருந்த ஒருவரால் மோட்டார்சைக்கிள் ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கும் மாந்தை கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை காப்பாற்றும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட உடனேயே குறித்த உறுப்பினர் பொலிஸாருடன் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

பொது தேவைகள் கருதியோ அல்லது மக்கள் நலன் கருதியோ பொலிஸ் நிலையத்துக்கு செல்லாத உறுப்பினர் இவ்வாறு ஒரு சந்தேக நபரை பாதுகாக்கும் பொருட்டு நேற்று இரவு முதல் இன்று காலை வரை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சந்தேக நபரை பாதுகாக்க முற்பட்டமை பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் பொதுமக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.