வவுனியாவில் எட்டு மாவட்டங்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

Report Print Theesan in சமூகம்

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் எட்டு மாவட்டத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பின் சார்பில் எட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வவுனியா மாவட்டத்தின் ஊடகப்பேச்சாளர் கே. தவராசா கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பேரணியானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் மீட்சிக்கும், அவர்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயம் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சர்வதேச மனித உரிமைப் பேரவையில் காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நியாயமான தீர்வு பெறக் கூடிய வகையில் அமைய வேண்டும்.

இந்த எட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை வவுனியாவில் எதிர்வரும் 30ம் திகதி காலை 10 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ள இருக்கின்றோம்.

இந்த பேரணிக்கு பரிபூரணமான ஆதரவை எட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கிய சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், தந்து இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்தில் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தீர்வு நாளுக்கு நாள் இழுத்தடிப்பு போவது இல்லாமல் செய்து அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்வதற்கான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை எல்லோரும் வழங்க வேண்டும்.

இம்மாதம் நடைபெறவுள்ள பேரணிக்கும், போராட்டத்திற்கும் சகல அமைப்புகள், தனிநபர்கள், அரசியல்வாதிகள், சிவில் பிரதிநிதிகள் எல்லோரும் பூரண ஆதரவு தந்து எமது போராட்டத்தை வலுப்பெற நடவடிக்கை எடுக்கும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அத்தோடு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு நிறைந்து இருக்கின்ற காரணத்தினால் பல்கலைக்கழகத்தை சார்ந்தோரும், பல்கலைக்கழக மாணவர்களும் அனைவரும் இணைந்து இந்தப் போராட்டம் வலுப்பெற நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும் என்று நாம் நம்புவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers