கொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு மாவட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கொழும்பில் 3 இலட்சம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அதேப்போல் 50,000 குடிசை வீடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.