2016 - 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Report Print Murali Murali in சமூகம்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும், மூன்று வருட கால, சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, பாடநெறிக்கான விண்ணப்பங்கள் இன்று வெளியாகவுள்ளது.

கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்திற்காக 8,000க்கும் அதிகமானவர்ளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி பெப்ரவரி 15 ஆகும்.

விண்ணப்பதாரிகள் ஜனவரி முதலாம் திகதியன்று 25 வயதுக்கு மேற்படாதவர்களும் சமய பாடநெறிக்காக விண்ணப்பிக்கும் மதகுருமார்கள் மற்றும் வணக்கத்துக்குரியவர்கள் 30 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருத்தல் வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.