விசித்திர காரில் பயணித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மஹிந்தவின் மகன்!

Report Print Vethu Vethu in சமூகம்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவின் திருமண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு முறை நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்தவின் வீட்டுத் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இது ஒட்டுமொத்த இலங்கையர்களின் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

செலவுகளை குறைத்து, உள்நாட்டு உற்பத்தி உணவுகள் மாத்திரம் பயன்படுத்தி இந்த திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமண வைபவத்தின் பின்னர் புதுமணத் தம்பதியர் சென்ற வாகனம் பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளது.

இலங்கையின் மிகப் பழைமையான மோட்டார் வாகனம் ஒன்றில் அவர்கள் பயணித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பென்ஸ் கார், லெம்போகினி கார்களினால் சர்ச்சைகளில் சிக்கியிருந்த ராஜபக்ச குடும்பத்தினர் இந்த வகையான கார் ஒன்றை தெரிவு செய்திருப்பது அனைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வும் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், இயற்கையோடு ஒன்றியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers