மர்மப் பொருட்கள் இருப்பதாக இரகசிய தகவல்! இலங்கையின் காட்டுப்பகுதியில் கிடைத்த கொள்கலன்

Report Print Theesan in சமூகம்

மன்னார் - பேசாலை, நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிலிருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடி பொருட்களை நேற்று மாலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடுக்குடா கடற்கரையோரத்திலுள்ள காட்டுப்பகுதியில் கொள்கலன் ஒன்றில் மர்மப் பொருட்கள் இருப்பதாக நேற்று மதியம் பேசாலை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியில் கொள்கலன் ஒன்றிலிருந்து கிளைமோர் 1, ஜெரற்னைட் 4, துப்பாக்கி, துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.