மட்டக்களப்பில் அணிலொன்றால் நேர்ந்த விபரீதம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் நபர் ஒருவர் மேற்கொண்ட மனிதாபிமான செயற்பாட்டினால் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளை அணிலொன்று குறுக்கிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் அணிலை காப்பாற்றுவதற்காக திடீரென பிறேக் பிடித்த போது பின்னால் வந்த முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிளை மோதியுள்ளது.

இவ்விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் இரு வாகனங்களும் சேத்திற்குள்ளாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers