மருதானை இந்து வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கி வைப்பு

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - மருதானை, இந்து வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசனின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது, மேல் மாகாணசபை உறுப்பினர்களான குருசுவாமி, டி.சுதாரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.