யாழில் நுகர்வோர் வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

Report Print Sumi in சமூகம்

யாழில் இன்று வடக்கின் மிகப் பாரிய நுகர்வோர் வர்த்தக கண்காட்சி 10ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக கண்காட்சிக் கூடத்தை யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆரம்பித்து வைத்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ் வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், இலங்கை மாநாட்டு அலுவலகம் மற்றும் சர்வதேச வர்த்தக மன்றம், யாழ் மாநகரசகை மற்றும் யாழ் இந்திய தூதுவராலயம் ஆகியன இணைந்து இந்த வர்த்தக சந்தையினை பத்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளன.

வடக்கிற்கான நுழைவாயில் என்ற கருப்பொருளில் இக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியானது இன்று தொடக்கம் மூன்று நாட்கள் இடம்பெற உள்ளது.

இதில் தொழில் வழிகாட்டி சேவைகள், விசேட உணவு வகைகள், மருத்து ஆலோசனைகள், கட்டட நிர்மாணப் பொருட்கள், அழகுக்கலை, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உள்ளுர் உற்பத்திகள் எனப் பல்வேறு உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.