மடு சந்தியில் பாரம்பரிய உணவகம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, மடு சந்தியில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் மடுச் சந்தியில் வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாரம்பரிய உணவகத்தினை கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அழைப்பின் பெயரில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது நானாட்டான் பிரதேச சபைத்தலைவர், மடு பிரதேச செயலாளர் , கிராம அபிவிருத்தி , மாவட்ட உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மடு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாச உறுப்பினர்கள் அக்கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.