இலங்கையில் தொண்மை வாழ்வியல் மரபை கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கையகப்படடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
அந்த வகையில் தேசிய இனத்தின் அடிப்படை கூரான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துக் கொண்டுள்ளோம் என்ற விடயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
இதன் வெளிப்பாடே முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சட்ட விரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெறப்பட்ட தகவலின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 14ஆம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைவாக கரைதுறைபற்று பிரதேச செயலகத்தினால் இவ் விகாரை அமைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் எந்த விகாரையும் காணப்பட வில்லை. அதை அண்டிய பிரதேசத்தில் பௌத்த மதத்தை வழிபடுகின்ற பௌதர்கள் நிரந்தரமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
தொடர்ந்தும் குறித்த ஆலய வளாகத்தில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கான காணிகள் எதுவும் ஒதுக்கப்பட வில்லை.
பௌத்த மத குரு தங்கியிருக்கும் அரச காணியில் அவர் தங்கியிருப்பதற்கான காணி அனுமதி பத்திரம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவும் இல்லை.
தற்போது குறித்த மத குருவினால் குறித்த பகுதியில் மேற்கொண்டு வருகின்ற கட்டுமானங்களுக்கு பிரதேச செயலகத்தால் எவ் விதமான அனுமதியும் வழங்கப்பட வில்லை.
குறித்த விகாரை அமைப்பதற்கு அரச காணி கோரி பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்பட வில்லை.
விகாரை அமைந்துள்ள பகுதியில் அண்மையில் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கிறவல் அகழ்விற்கு பிரதேச செயலகத்தினால் எவ் விதமான அனுமதியும் வழங்க வில்லை.
செம்மலை கிராம மக்கள் ஆண்டு ஆண்டு காலமாக வழிபட்டு வந்த குறித்த பிள்ளையார் ஆலயத்தில் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் புதிய பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த விகாரையில் தற்போது மிக பெரிய புத்தரின் சிலையும் அமைக்கப்பட்டு வருகின்றது.
மேலும் குறித்த பிள்ளையார் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கு சட்ட விரோதமாக அமைக்கப்படும் விகாரையின் பிக்குவால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் செம்மலை கிராம அபிவிருத்தி சங்கத்தினால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைவாக இங்கு அமைக்கப்பட்டு வரும் விகாரை எந்த விதமான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அமைக்கப்பட வில்லை என்று உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிராம அலுவலகர்கள் ஊடாக இந்த பிரதேசத்தில் இருகின்ற காணிகளின் உண்மையான காணி உரிமையாளர்கள் தொடர்பாக விபரங்கள் சேகரிக்கப்பட்டுகின்றன. அத்தோடு அனுமதி பத்திர பிரதிகளும் சேகரிக்கப்படுகின்றன.
வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரைதுறைபற்று பிரதேச செயலகத்தால் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த விகாரையானது அத்து மீறி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டள்ளது என்பது உத்தியோக பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது மிகவும் வேகமான முறையில் பிரமாண்ட புத்தர் சிலையை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இதனால் இப் பகுதியில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த விகாரதிபதி செயற்பட்டு வருகின்றார் என்றும் குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பிள்ளையார் ஆலயத்திற்கு கணதேவி தேவாலயம் என்ற பெயர் பலகையும் பிக்குவால் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பெயர் பலகை நாட்டப்பட்ட விடயம் தொடர்பில் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்ட போதிலும் பொலிஸாரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
புத்தர் அநுராதபுரத்து மலையில் நின்றால் என்ன? இருந்தால் என்ன? கிடந்தால் என்ன? அங்கு மைக்கப்படும் சமய புணர்தானங்களை வடக்கு, கிழக்கு தமிழர்கள் கேக்கின்றார்களா? அல்லது முறையிடுகின்றார்களா?
ஆனால் வடக்கு, கிழக்கு தாயகத்தில் சைவ ஆலயங்கள் உள்ள மண்ணில் புத்தர் சிலைகள் அமைப்பு, ஆக்கிரமிப்பின் குறியீடுகளே என்று கூறப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா அரச இயந்திரத்தின் இந்த தான்தோன்றி தனமான புத்தர்களின் பின்னால் உள்ள பண்பாட்டு மடைமாற்று நோக்கை புரிந்துக்கொள்ள தமிழ் மக்களுக்கு ஆழமான அரசறிவியல் தேவைப்படாது.
மாணிக்க மடுவில் இருந்து குறுந்தமலை வரையிலான புத்தரின் நில ஆக்கிரமிப்பிற்கான மக்களின் பதிலெடுத்தவர்களின் தேசிய இனமாக இருக்க வேண்டிய விருப்பையும் தேவையையும் சுட்டிகாட்டுகின்றன.
இந்த நிலையில் ஈழ தமிழர்களின் நிலங்களின் மீதான சுற்றிவளைப்புகளின் கருவியாகவே புத்தர் சிலைகள் முளைத்துக் கொண்டிருப்பதை மக்கள் அறிந்தே உள்ளனர்.
குறித்த அதிகாரங்கள் சிங்கள அரசுடன் இணைந்தோ தனித்தோ தமிழர் தாயகத்தை காவுகொள்கின்றன.
இந்த நிலையில் தான் பௌத்த மதத்திற்கு மட்டும் முன்னுரிமை மற்றும் ஒற்றை ஆட்சி தொடரும் வடக்கு, கிழக்கு இணைப்பிலே சமஸ்டி இல்லை என்ற நான்கு விடயங்களை தாங்கிய புதிய அரசமைப்பும் வரவிருக்கின்றது.
இவ்வாறு வரவிருக்கும் அரசமைப்பை எதற்காக எதிர்கின்றிர்கள் என்ற வினாவை எழுப்புகின்றார் எமது நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
பௌத்ததிற்கு முன்னுரிமை கொடுப்பதன் வெளிபாடுதான் புத்தர் வராத இடங்களில் எல்லாம் புத்தர் சிலை அமைக்கும் செயற்பாடு.
பௌத்த வேத நூல்கள் உண்மையில் மானுட உய்வுக்கான அறநெறிகளை உள்ளடக்கிய ஒன்று. மறுபுறம் பௌத்த மதம் சிங்கள இனத்துவத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்தமாக உருபெறபித்து மற்றவர்களை அந்நியப்படுத்தும் போக்கை எப்படி கண்டுக்கொள்ளாமல் விடுவதே பலரின் கேள்வியாக உள்ளது.
இலங்கையின் மரபுரிமை என்பது சிங்களவர்களின் மரபுரிமையாக மட்டும் நம்ப வைக்கப்பட்டுள்ள தேசத்தில் வேறேன்ன மிஞ்சும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பல இனங்களும் இணைந்து வாழும் நாட்டு சூழலை ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலை எமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும் இவ் விடயத்தை பல் மதத்தினவர்களும் ஏற்று நடத்தல் வேண்டும். இதன் பின்னரே நாட்டு மக்கள் இனவாதம் இன்றி வாழ்வார்கள்.
இவ்வாறான குழப்ப சூழ் நிலையினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிமலநாதன் பிரதமருடன் இடம்பெற்ற கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.
இவ்வாறு இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு பிரதமரின் செயளாலரினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடித்திற்கு தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுப்பிய பதில் கடித்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இவ் விடயம் தொடர்பில் பொய் குற்றசாட்டை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களின் புராதான சின்னமாக காணப்படும் செம்மலை தொடர்பில் அசமந்த போக்குடன் தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதில் தெரிவித்ததன் காரமாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.