திருகோணமலையில் வெடி மருந்துகளை வைத்திருந்த மூவருக்கு விளக்க மறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சீனக்குடா பகுதியில் அனுமதிபத்திரமின்றி டைனமையிட் வெடி மருந்துகளை வைத்திருந்த மூவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

மூதூர்,நெய்தல் நகர், பஹ்ரியா நகர் பகுதியைச் சேர்ந்த 21, 43 மற்றும் 26 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் அனுமதிப்பத்திரமின்றி ஒரு அடி நீளமான டைனமையிட் குச்சியை கடலுக்கு கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Latest Offers