சர்ச்சையில் சிக்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்! ஏளனம் செய்யும் மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்பாடு குறித்து உள்ளுர் ஊடகங்களும், நாட்டு மக்களும் விமர்சித்துள்ளனர்.

எகிப்தில் வைத்து காணாமல் போன இலங்கை பெண்ணொருவர் தொடர்பில் பொது மக்களின் உதவியை பணியகம் கேட்டுள்ளது.

பொலநறுவையை சேர்ந்த நூரா இப்ராஹிம் என்ற பெண் கட்டாருக்கு செல்லும் போது எகிப்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெண் தொடர்பில் தகவல் அறிந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 0112- 864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரி கையொப்பமிட்டுள்ளார்.

எகிப்தில் காணாமல் போன பெண் தொடர்பில் இவ்வாறான அறிக்கை வெளியிட்டிருப்பது, அந்த பெண்ணை தேடுவதாக இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்தி முட்டாளாக்கும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எகிப்தில் காணாமல் போன ஒருவர் தொடர்பில் இலங்கை ஊடகத்தில் தகவல் வெளியிடுவது அவசியமற்றது. இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest Offers