கொல்லநுலை மக்களுக்கான குடி நீர் விநியோகம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசனின் நிதி உதவியில் கொல்லநுலை மக்களுக்காக சுத்தமான குடி நீர் விநியோகம் திட்டம் இன்று கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலாய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொல்லநுலை கிராம மக்கள் பல நெடுங்காலமாக சுத்தமான குடிநீர் இன்றி அல்லலுற்றுவந்த நிலையில் இலங்கை இராமகிருஸ்ண மிசனால் இவர்களுக்கான குடி நீர் விநியோகம் திட்டம் ஆரம்பிக்கபட்டு அத்திட்டமானது இன்று கொல்லநுலை மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இலங்கை ராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா மற்றும் ராமகிருஸ்ண மிசனின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தா ஆகியோர் இணைந்து குறித்த குடிநீர் விநியோகத் திட்டத்தினை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், மாநகர முதல்வர் தி.சரவணபவன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தலைவர் புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா மற்றும் கிராம மக்கள், மாவணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.