வவுனியாவில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட போதை ஒழிப்பு நடவடிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா அல்-இக்பால் மகாவித்தியாலயத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் போதைப் பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மட்டத்தில் கடந்த 21ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 25ஆம் திகதி வரை போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலயத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை வாரம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் ஏ.அப்துல் நசார் மற்றும் பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.றாசிக் ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கை இடம்பெற்றது.

அதனடிப்படையில் இராணுவத்தினர், பொலிஸார், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் துணையுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இவ் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.