போதைப்பொருள் விற்பனையை நகர்த்தும் விஷமிகளிடமிருந்து மாணவர்களை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை சது/ஹோலிக் குறோஸ் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறிய புஷ்பம் தலைமையில் இன்று மாணவர்களது விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாட்டின் அனைத்து பாகங்களிலும் போதைப்பொருள் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு போதைப்பொருள் பாவனையின் தீங்குகளையும், விளைவுகளையும், எடுத்தியம்பும் விதமாக நாடளாவிய ரீதியில் 2019-01-21 தொடக்கம் 2019-01-25 வரை போதைப்பொருள் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் பாவனையில் அடிமையாக்கப்பட்ட சமூகத்தை முற்றாக நீக்கி மீட்டெடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

போதைப்பொருள் பாவனையின் தீங்குகள் பற்றிய பதைகைகள் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு தீமைகளை சுட்டிக்காட்டும் வதமாக வீதி நாடகங்களும் இடம்பெற்றன.

இதேவேளை, அண்மைக்காலங்களாக மாணவர் சமூதாயத்தை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையை நகர்த்தும் விஷமிகளிடமிருந்து மாணவர்களை காக்கும் நடவடிக்கையாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஷீன் பக்கீர் தலைமையிலான பொலிஸார் போதைப்பொருள் பாவனை குறித்த விளைவுகளை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

இந் நிகழ்விற்கு பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.