பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய காணொளி! இரண்டாவது விசாரணை அறிக்கை கையளிப்பு

Report Print Murali Murali in சமூகம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது

நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழுவினர், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான கானொளி தொடர்பாகவும் குறித்த குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் மீத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்த காணொளி ஒன்று அமையின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது. இந்த காணொளி வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இதனையடுத்து நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சர் தலதா அத்துகோரல சம்பவம் குறித்து விசாரணை செய்ய இரண்டு குழுக்களை நியமித்திருந்தார்.

இதன்படி, சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை கடந்த திங்கட்கிழமை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.