கிளிநொச்சி, தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு

Report Print Mohan Mohan in சமூகம்

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி - தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை மாணவர்களினால் நேற்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மேதையாக இருந்தாலும் போதையில் நீ மிருகம், போதையற்ற சமுதாயத்தை உருவாக்க அணி திரள்வோம், நாட்டை சீரழிக்கும் போதைப்பொருளை முற்றக அழித்தொழிப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.