கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு! 14 பேர் கைது

Report Print Manju in சமூகம்

கொழும்பு, வெலிக்கடையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

வோல்டர்- குணசேகர மாவத்தையில் நடத்திச் செல்லப்பட்ட விடுதியே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படு்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.