சினிமாவில் போதைப்பொருள் பாவனைக்கு ஆதரவான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதைப்பொருள் பாவனைக்கெதிரான நடவடிக்கை பாராட்டத்தக்கது என கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சமூக ஊடகங்கள் மற்றும் சினிமா வாயிலாக முன்னெடுக்கப்படும் போதைக்கு ஆதரவான நடவடிக்கைளை ஊடகங்களும் அரசும் ஏன் கட்டுப்படுத்துவதில்லை என அவர்கள் வினவியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

திருகோணமலை - மூதூர், கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள் இன்று போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே மாணவர்கள் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் அவர் கூறுகையில்,

கண்டி கலவரத்தின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை போன்று, போதையை தூண்டும் வகையிலான சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் சினிமா காட்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசியளவில் பாடசாலைகளூடாக முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கடந்த 5 நாட்களாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.