கவனயீர்ப்பு போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள்! பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார்

Report Print Mohan Mohan in சமூகம்

கேப்பாபுலவு மக்கள், தமக்கு நீதியான ஒரு தீர்வு வேண்டும் என கோரி இன்று 693ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு - கேப்பாபுலவு, பிரதான இராணுவ முகாமிற்கு முன்னால் இன்று காலை போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவமே வெளியேறு, எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.