கஞ்சா விற்பனை செய்த நபருக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கிண்ணியாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்ப்படுத்திய போதே பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கஞ்சா வைத்துள்ளதாக கிண்ணியா போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே 2.2 கிலோ கிராம் கேரளா கஞ்சா, 235 000 ரூபாய் பணத்துடன் குறித்த நபர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Offers