கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது

Report Print Ashik in சமூகம்

மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இருவரையும் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து நேற்று இரவு மன்னார் பிரதான பாலத்தில் வைத்து ஹயஸ் ரக வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த உடுகம மற்றும் ஜாஏல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் வாகனம் என்பன மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தள்ளனர்.