தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி சத்தியாகிரகப் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க கோரி நபர் ஒருவர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று டிக்கோயா, சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், கொழும்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் குறித்த நபர் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.