உலக முடிவில் ட்ரோன் கமெராவை பயன்படுத்திய நபருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Manju in சமூகம்

ஹோர்டன் தேசிய பூங்காவின் வாகன நிறுத்துமிடம் வரை ட்ரோன் கமெராவைக் கொண்டு சென்ற நபருக்கு நீதிமன்றத்தால் 20 ஆயிரம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலியந்தலையைச் சேர்ந்த எஸ்.ஜோசப் பெரேரா என்ற நபருக்கே நேற்று முன்தினம் நுவரெலிய நீதிமன்றம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய உபகரணங்களிலிருந்து வெளியிடப்படும் நுட்பமான சத்தத்தினால் பூங்காவில் வசிக்கும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் குறித்த இடத்திற்கு மேலாக கமெராக்களினால் கண்காணிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்தநபர் குறித்த இடத்தில் ட்ரோன் கமெராவை பயன்படுத்தியதால் பூங்காவின் பொறுப்பான உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை குறித்த ட்ரோன் கமெராவின் உரிமையாளர் வேறு ஒருவர் எனின் அவரிடமும் அது தொடர்பாக வினவப்படுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.