புல்மோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! ஆறு பேர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆறு சந்தேகநபர்களை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமீலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற குறித்த மோதலின்போது புல்மோட்டை, அரபாத் நகர் பகுதியை சேர்ந்த 28, 29, 26, 33, 19 மற்றும் 24 வயதுடைய ஆறு பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து செயற்பட்டதோடு, ஒரு குழுவில் உள்ள நபரின் மனைவி தொடர்பாக சமூக வலைத்தளத்தில் மற்றொரு குழுவினர் பதிவேற்றியதன் காரணமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆறு சந்தேகநபர்களை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers