கொட்டகலையில் இடம்பெற்றுள்ள இரு விபத்துக்கள்!

Report Print Thirumal Thirumal in சமூகம்

கொட்டகலை பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

கொட்டகலை, ரொசிட்டா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வான் ஒன்று மோதியுள்ளது. இவ்விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வான் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தினால் வானில் பயணித்த இளைஞர் ஒருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியானது முந்தி செல்ல முற்பட்டமையே இவ்விபத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.