படைப்புழுக்களை இனங்கண்டு அழியுங்கள்! விவசாய பணிப்பாளர்

Report Print Ajith Ajith in சமூகம்

படைப்புழு என்று நினைத்து சாதாரண புழுக்களுக்கு இரசாயன மருந்தை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்று விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.டபில்யு.எம்.வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

சோளப்பயிர் செய்கைளை படைப்புழு தாக்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் படை புழுக்கள் ஏனைய தாவரங்களையும் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வாழையில் இந்த புழுக்கள் பரவியுள்ள தகவலை பணிப்பாளர் மறுத்தார். பயிர்களில் பல்வேறுப்பட்ட புழுக்கள் உள்ளன.

எனவே அதனை சரியாக அடையாளம் கண்டு படைப்புழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் விவசாயிகளிடம் கோரியுள்ளார்.