யாழில் போதை பொருளுடன் மூவர் கைது!

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் 110 கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்த 3 பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினரும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து இன்று மாலை வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதுடன், மூவரை கைதுசெய்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இருவரும், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கைதுசெய்த நபர்களை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.