தனது வீட்டு மலசல கூடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த சிறுமி

Report Print Manju in சமூகம்

மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் தரம் 11 இல் கல்வி பயிலும் சிறுமியொருவர் தனது வீட்டு மலசல கூடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை பிறந்தவுடன், குறித்த சிறுமியின் தாயார் குழந்தையையும் தனது மகளையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தற்போது, குழந்தை மற்றும் தாய் பிபில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிகக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குழந்தை பிறக்கப்போவதாக தான் அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்று வலி காரணமாக தான் மலசல கூடத்திற்கு சென்றதாகவும் அதன்போது குழந்தை பிறந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞனைக் காதலித்து வந்துள்ளதாகவும் குறித்த இளைஞனுடன் பல முறை சிறுமி ஒன்றாக இருந்துள்ளதாகவும் கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த இளைஞனுடன் ஒன்றாக இருந்ததாக பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சந்தேகநபரை மெதகம பொலிஸார் கைது செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.