இராணுவ முகாம் முற்றுகை! கேப்பாப்பிலவு பகுதியில் பதற்றம்

Report Print Murali Murali in சமூகம்

காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இன்று இராணுவ முகாமை முற்றுகையிட முற்பட்டதையிட்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்பிலவு மக்கள் பல மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், அவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரையில் தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இன்று இராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, இராணுவ முகாமை நோக்கி கேப்பாப்பிலவு மக்கள் படையெடுத்த நிலையில், பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி இராணுவ முகாமை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து ஆரப்பாட்டகாரர்கள் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் - யது