இந்திய கடற்படை அதிகாரிகளை சந்தித்த இலங்கையின் கடற்படை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் கடற்படை அதிகாரிகள் குழு இந்திய கொச்சினில், இந்திய கடற்படை அதிகாரிகளை இன்று சந்தித்துள்ளது.

இலங்கையின் குழு ஜனவரி 21 கொச்சின் கடற்படை தளத்துக்கு விஜயம் மேற்கொண்டது.

இந்த விஜயத்தின்போது இலங்கையின் கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் இரண்டு தரப்புக்களும் ஆராய்ந்துள்ளன.

அத்துடன் இரண்டு தரப்பும் கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக பேசப்பட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று கூறுகிறது.

மேலும், இலங்கையின் கடற்படைக் குழுவுக்கு கொமடோர் ஏ.கே.எம்.ஜினதாஸ தலைமை தாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.