பலத்த பாதுகாப்புகளுடன் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மனித புதைகுழி எச்சங்கள்!

Report Print Nivetha in சமூகம்

மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் சில மனித எச்சங்கள் காபன் பரிசோதனை செய்வதற்காக நேற்று ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதி மன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த மனித எச்சங்கள் B/295 எனும் இலக்கமிடப்பட்டு ஆய்வகத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் மிராக் ரஹீம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் விஸ்.நிரங்சன், ரங்சிதா ஆகியோர் உடன் இருந்தமை குறிப்பிடதக்கது.

Latest Offers