வீட்டினை உடைத்து பெண்ணொருவரை தாக்கிய நால்வர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றினை உடைத்து பெண்ணொருவரை தாக்கிய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நல்லூர்,தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 27,22,49 மற்றும் 36 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பூர் பகுதியில், பெண் ஒருவர் மதுபானம் விற்பனை செய்வதாக கூறி சந்தேக நபர்கள் நால்வரும் வீட்டினை உடைத்து பெண்ணொருவரை தாக்கியுள்ளதாக சந்தேக நபர்களுக்கெதிரான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.