யாழ்ப்பாணத்திற்கு புறப்படத் தயாராகவிருக்கும் உத்ரதேவி

Report Print Nivetha in சமூகம்

யாழிற்கான தனது முதலாவது பயணத்தை உத்துர தேவி ரயில் நாளை ஆரம்பிக்கவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நாளை காலை ஆறு மணிக்கு புதிய ரயில் வண்டி புறப்படும்.

இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, வடக்கு, தெற்கு நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் புதிய ரயில் வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.

இந்திய இலங்கை நல்லிணக்க உறவின் கீழ் வழங்கி வைக்கப்பட்டுள்ள இப்புகையிரதம் பரீட்சார்த்த ஒட்டத்தை வெற்றிக்கரமான முறையில் நிறைவு செய்து பயணாளர்களின் கரங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும் இரண்டாம் வகுப்பு பெட்டியும் அதில் அடங்குகின்றன. மொத்தமாக 724 பயணிகள் ஒரே தடவையில் பயணிக்கலாம்.

இந்த ரயில் வண்டியில் யாழ்.மாவட்ட பாடசாலை மாணவர்களுக்காக புத்தகப் பைகள், அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.