தமிழர் தலைநகரில் இரு சிறுவர்களின் மோசமான செயல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

தமிழர் தலைநகரான திருகோணமலையின், ஐந்தாம் கட்டை பகுதியில் கடையொன்றினை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இரு சிறுவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பேரும் அதே பகுதியை சேர்ந்த 14 மற்றும் 16 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்தாம் கட்டை பகுதியில் கடை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறித்த சிறுவர்கள் கடையை உடைத்திருக்கலாம் என கடை உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் உப்புவெளி குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன்பின்னரே சந்தேகத்தின் பேரில் குறித்த சிறுவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் 3 துவிச்சக்கரவண்டிகளை சந்தேகநபர்கள் திருடி மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் வழிபாட்டுத் தலம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஒன்றினை உடைத்து அவர்கள் பணம் திருடியமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் இன்று திருகோணமலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers